கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டணமில்லாமல் இலவசமாக படிக்க வாய்ப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டணமில்லாமல் இலவசமாக படிக்க வாய்ப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

முதலாம் வகுப்பில் சேர, மார்ச் 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் www.kvsonlineadmission.in ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது, ஒருவர் மூன்று பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் அளிக்கக் கூடாது. விண்ணப்பத்தில் மொபைல் எண், இமெயில் முகவரி, குழந்தையின் புகைப்படம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தால் வருமானச் சான்றிதழ், பணியிலிருந்து மாற்றலாகியிருந்தால் அதற்கான சான்று போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.
இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதை ஆன்லைன் வழியே பார்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். பதினொன்றாம் வகுப்பில் சேர, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment
Your comments are welcome!