வாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்! கோபம் ! You will not be punished for your anger, you will be punished by your anger - உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாக தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் கூலாக வாழ முயலுங்கள்! உணருங்கள்! When you realize how perfect everything is you will tilt your head back and laugh at the sky - உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்! உண்மை Three things cannot be long hidden: The sun, the moon, and the truth - நீங்கள் எதை வேண்டுமானாலும் மறைத்துவிட முடியும்; ஆனால், உண்மையை மறைப்பது என்பது முடியாத காரியம். உண்மை என்பது சூரிய சந்திரர்களை போன்றது; அழிவில்லாதது, மறைக்க முடியாதது. வாழ்வில் உண்மையை கடைபிடிக்க முயலுங்கள், உண்மைஆய்க இருக்க முயற்சியுங்கள்! ...