Truecaller எப்படி வேலை செய்கிறது?
ஒரு நிகழ்ச்சியில், எந்திரன் படத்தை வைத்து ஒரு நகைச்சுவை ஸ்கிட் செய்திருந்தார்கள், அந்தப் படத்துல நாம ரொம்ப ரசிச்ச, சிட்டி போன் நம்பர் யாரோடதுன்னு சொல்ற டயலாக்கை காமெடிக்காக, ‘இது மந்தவெளி பி.பீதாம்பரத்தோட நம்பர். செம காமெடியா இருந்தது. கிட்டத்தட்ட இதே கான்ஷப்ட் தான் நாம யூஸ் பண்ற TrueCaller App. அதாகப்பட்டது புது நம்பரிலிருந்து நமக்கு கால் வந்தாலோ, இல்லை நாம புது நம்பருக்கு கால் பண்ணினாலோ அது யாருடைய நம்பர்னு காட்டும் ஒரு அப்ளிகேஷன். அது யாருடைய நம்பர்னு Truecallerக்கு எப்படி தெரியும்? நீங்க TrueCaller இன்ஸ்டால் பண்ணினா உங்க காண்டாக்ட்ஸ் எல்லாத்தையும் அதோட டேட்டாபேஸ்ல எடுத்து வச்சுக்கும். அந்த டேட்டாபேஸில் இருந்து பெயர்களைக் காட்டுகிறது. TrueCaller பயன்படுத்துறவங்க ரெண்டு விஷயத்தை மனசுல வச்சுக்கணும். ஒண்ணு இந்த டேட்டாபேஸ் எப்போதும் திருடு போகலாம், அதனால காண்டாக்ட்ல பேங்க் அக்கவுண்ட் நம்பரை ஷேவ் பண்ணி வைக்கிறது, ஏடிஎம் பின் நம்பரை ஷேவ் பண்ணி வைக்கிறதுலாம் கூடாது.