அமேசான் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் `ரிங்' என்னும் வீடியோ காலிங் பெல் தயாரிக்கும் நிறுவனத்தை 6,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்தச் செய்தியை, நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம் எனத் தெரியாது. ஆனால், உலகமே உற்று கவனிக்கவேண்டிய, விவாதிக்கவேண்டிய மிக முக்கியமான செய்தி இது. காலிங்பெல் எல்லாம் வழக்கொழிந்து, நாம் மொபைலில் மிஸ்டுகால் கொடுத்து கதவு திறக்கச் சொல்ல ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்தில், `காலிங் பெல்லில் முதலீடா?' எனத் தோன்றுகிறது இல்லையா! அதுவும் `இதில் 6,500 கோடி ரூபாய் பணம் போடுவதென்றால், அவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும்' என்றுகூட நினைக்கத்தோன்றும். ஆனால், உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் அமேசான் ஒன்றும் முட்டாள் அல்ல. உண்மையில், இந்த ரிங் பெல் என்பது பக்கா க்ளாரிட்டியுள்ள, ஹெச்டி கேமராவுடன் 180 டிகிரி பார்க்கக்கூடிய ஒரு ஹைடெக் டோர் பெல். எப்போதும் இன்டெர்நெட்டில் இணைந்திருக்கும் இது, நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது மட்டுமல்ல, வெளியில் எங்கேயாவது இருக்கும்போதும் யாராவது உங்கள் வீட்டுக்கு வந்தால், உங்கள்...