Posts

Showing posts from January, 2021

Awareness - ஆன்லைன் வகுப்புகள் ....!!

Image
  ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் இந்த நேரத்தில், குழந்தைகள் கையில் தனி மொபைல் வாங்கி தரும் பெற்றோர்கள் கவனத்திற்கு. தனி மொபைல் கையில் கிடைத்ததும் நம் பிள்ளைகள் அதில் என்ன செய்கிறார்கள் என்று முழு நேரம் நம்மால் கண்டிப்பாக பார்த்து கொண்டு இருக்க இயலாது. அதற்காக ஒரு எளிய வழி முறை... நான் பயன்படுத்தும் முறை இதுவே... Google Play Store Family link என்னும் செயலி.. முதலில் உங்கள் குழந்தை மொபைலில் அவர்களுக்காக ஒரு Child google அக்கவுண்ட் ஆரம்பித்து பின்பு அவர்கள் மொபைலில் கூகுள் பேமிலி லிங்க் ஃபார் சில்ரன் செயலி மற்றும் நமது மொபைலில் google family link பார் பேரன் செயலியையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு செயலியை இணைப்பதன் மூலம் அவர்களது மொபைல் முழு கண்ட்ரோல் நமது கையில் வந்து விடும். எனக்கு பிடித்த அம்சம் daily limit மற்றும் Bed time... இதன் மூலம் உங்கள் குழந்தை ஒரு நாளுக்கு எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியும்... கூகுள் பிளே பேரண்டல் கன்ட்ரோல் மூலமாக உங்கள் குழந்தை எந்த மாதிரியான விஷயங்களை playstore மற்றும் chrome பார்க்க வேண்டும் என...