இனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்!
வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா-வில் இணையதளம் மூலம் விலகுகளில் நேரடி செயல்களை நேரடியாக ஒளிபரப்ப (Live streaming) வசதி அறிமுகம்! வண்டலூர் உயிரியல் பூங்கா-வை காண பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டவர்களும் அதிகமாக வர துவங்கியிள்ளனர். பார்வையாளர்களை கவரும் வகையில் தற்போது பூங்கா நிர்வாகம் ஆன்லைன் மூலம் Live streaming வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை மூலம், சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்லைன் மூலம் காணமுடியும். ஓரிரு நாட்களில் யானை, வெள்ளை புலி, வங்க புலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளை https://www.aazp.in/live-streaming/ என்ற இணையத்தில் நேரடியாக காணலாம்.